கோஷ்டி பூசலில் சமஸ்தான ஐயப்பன் கோயில்
முதுகுளத்தூர்;ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குட் பட்ட முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐயப்ப பக்தர்க ளிடையே நிலவிவரும் கோஷ்டி பூசலால் மண்டல பூஜை நடக்குமா என்ற ஐயப்பாடு நிலவுகிறது.முதுகுளத்தூரில் 17 ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு காளி, நவக்கிரகங்கள், வள்ளி, தெய்வானை யுடன் முருக பெருமான் உட்பட சுவாமி சிலைகள் உள்ளன. இவைதவிர கோயில் வளாகத்தில் தனியாக ஐயப்ப பக்தர்கள் இணைந்து ஐயப்பன் கோயில் கட்டி மண்டல பூஜை நடத்தி வருகின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்துள்ளதால் வரும் டிச.27 ல் யார் தலைமையில் மண்டல பூஜை நடத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி.,யிடம் புகார் கொடுக்க பட்டுள்ளது. சமஸ்தான கோயிலுக்கு பாத்தியபட்ட முதுகுளத்தூர் சுப்பிர மணிய சுவாமி கோயிலுக்குள் இருக்கும் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடத்துவது தொடர்பாக இருதரப்பின ரிடையே நிலவும் கருத்து வேறுபாடு பக்தர்களை கவலையடையச் செய்துள்ளது. இதுகுறித்து ஐயப்ப பக்தர் ஒருவர் கூறுகையில், ""தங்களது வேண்டு தலுக்காக விரதமிருக்கும் ஐய்யப்ப பக்தர்கள் ஆன்மிக சேவையில் ஈடு படாமல் பூஜைகளை முடக்குவது கவலை யளிக்கிறது. அனைத்து பக்தர்களும் ஒருங்கிணைந்து பிரச்னைகள் ஏற்படாமல், சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜையை போன்று, முதுகுளத்தூரிலும் நடக்க சமஸ்தான நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.