சுசீந்திரத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :3654 days ago
நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலின் உட்பிராகரத்தில் காலபைரவர் சன்னதி உள்ளது. கார்த்திகை அஷ்டமியை ஒட்டி பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பின்னரே கோயிலில் அனுமதிக்கப்பட்டனர். டிச.,6 தினத்தையொட்டி கோயிலில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.