உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை கோயிலில் பைரவருக்கு அஷ்டமி பூஜை

உத்தரகோசமங்கை கோயிலில் பைரவருக்கு அஷ்டமி பூஜை

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி தாயார் கோயிலில் பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். நேற்று அஷ்டமி என்பதால் மாலை 5:30 மணியளவில் சாய ரட்சை பூஜைக்கு பின் பைரவருக்கு 18 வகையான மூலிகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிவப்பு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு வடை மாலையுடன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !