திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தயாராகிறது ஜமாஅத் உணவு!
ADDED :3597 days ago
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மண்டப வளாகத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் உணவு தயார் செய்து வருகின்றனர்.அங்கு தங்கியுள்ள மக்களுக்கு, உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக, கோவில், மசூதி போன்ற இடங்களில், நாள் ஒன்றுக்கு 1,600 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுவதாக, ஜமாஅத் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.