வில்லியனூர் கோவிலில் மகா ருத்ர ஜெபம்
ADDED :5196 days ago
புதுச்சேரி : வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் 78வது மகா ருத்ர ஜெபம் நேற்று முன்தினம் நடந்தது.வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் உலக நன்மை, கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்க வேண்டி, 178வது மகா ருத்ர ஜெபம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதனையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில், சாம்ராட் அமைப்பை சேர்ந்த 134 பேர் கலந்து கொண்டு,ஜெபம் செய்தனர்.