ஆண்டாள் திரு அவதார தின விளக்கு பூஜை
ADDED :5196 days ago
புதுச்சேரி : முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மட கோவிலில் ஆண்டாள் திரு அவதார தின திருவிளக்கு பூஜை இன்று நடக்கிறது.முருங்கப்பாக்கத்தில் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மட கோவிலில் ஆடிப் பூரத்தை முன்னிட்டு இன்று (2ம் தேதி) ஆண்டாள் திரு அவதார தின திருவிளக்கு பூஜை நடக்கிறது.காலை 7 மணிக்கு கலச பூஜை, கலச ஸ்தாபனம், 7.15 மணிக்கு ஆண்டாள் சமேத ரங்கநாதருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பூஜை துவங்குகிறது. 7.30 மணிக்கு மங்கள தீபாராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை ராமானுஜ பஜனை மட கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.