திருவாசகம் முற்றும் ஓதும் நிகழ்ச்சி
திருப்பூர்: ஆதீஸ்வர் டிரஸ்ட் சார்பில், திருவாசகம் முற்றும் ஓதும் நிகழ்ச்சி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது. திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், நாயன்மார் சிலைகளை புதிதாக அமைக்கவும், கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டியும், ஆதீஸ்வர் டிரஸ்ட் சார்பில், திருவாசகம் முற்றும் ஓதும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பவானி சிவனடியார் திருக்கூட்ட தலைவர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர், திருவாசக பாடல்களை பாடினர். செஞ்சேரிமலை திருநாவுக்கரசர் மட ஆதீனம் முத்துசிவராம சுவாமிகள் பங்கேற்று, அருளாசி வழங்கினார். பவானியில் இருந்து எடுத்து வரப்பட்ட நட ராஜர், சிவகாமி அம்மன் உற்சவ விக்ரகங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, திருவாசகம் ஓதப்பட்டது. திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம், அர்த்தஜாம பூஜை சிவனடியார் கூட் டம், கொங்கு ஆடல் வல்லான் அறக்கட்டளை, திருப் பூர் சைவ சித்தாந்த சபை, கணபதி பாளையம் சிவனடியார் கூட்டம், திருமுருகன்பூண்டி அர்த்தஜாம பூஜை சிவனடியார் கூட்டத்தினர் பங்கேற்றனர்.