ஊட்டி ஐயப்பன் கோவிலில் நிறமாலை பூஜை
ADDED :3593 days ago
ஊட்டி: ஊட்டி இரட்டை பிள்ளையார் இளைஞர் ஐயப்பன் பஜனை சபாவின் எட்டாம் ஆண்டு நிறமாலை பூஜைகள்,9ல் ஊட்டி ஐயப்பன் கோவிலில் நடக்கிறது. காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், 12:00 மணிக்கு அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு ஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகம், 6:45 மணிக்கு சிறப்பு படி பூஜை, பஜனை மற்றும் பிரசாத வினியோகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஊட்டி இரட்டை பிள்ளையார் இளைஞர் ஐயப்பன் பஜனை சபாவினர் செய்துள்ளனர்.