உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

ஈரோடு: ஈரோடு என்.ஜி.ஜி.ஓ., காலனி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நான்காம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரு தினங்களாக காலை, மாலை வேளைகளில் யாக பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை மங்கள இசை, கணபதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோபுர கலசங்கள், செல்வ விநாயகர், தட்ஷிணாமூர்த்தி, தர்மசாஸ்தா, விஷ்ணு, பால சுப்பிரமணியர், துர்க்கை, நவக்கிரகங்கள், ஆஞ்சநேயர், பிரம்மா, சரஸ்வதி, அரசமர விநாயகருக்கு ஒன்றன் பின் ஒன்றாக வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !