உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோட்டை கும்பாபிஷேக விழா முடிந்ததும் கொட்டித் தீர்த்த கனமழை

மலைக்கோட்டை கும்பாபிஷேக விழா முடிந்ததும் கொட்டித் தீர்த்த கனமழை

திருச்சி: மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா முடிந்ததும், கனமழை பெய்தது. பக்தர்கள் நனைந்தபடியே கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி, மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டன. அதிகாலை, 5 மணி முதலே பக்தர்கள் வரத்துவங்கினர். மாணிக்க விநாயகர் சன்னதி ராஜகோபுரம் வழி, தாயுமான ஸ்வாமி சன்னதி வழித்தடங்களில் போலீசார் தடுப்புகள் கட்டி மறித்ததுடன், சிறப்பு அனுமதி பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காலை, 8 மணிக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. தவிர, மலைக்கோட்டையை சுற்றியுள்ள வீடுகள், கடைகளின் மொட்டை மாடியில் நின்றபடி பொதுமக்கள் கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். காலை, 9 மணிக்கு கும்பாபிஷேகம் சிறப்புடன் முடிந்தது. 9.30 மணிக்கு சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் கும்பாபிஷேகம் காண மலை மீது சென்றவர்கள் கீழே இறங்கும் வரை, கீழே இருந்த மக்களை தரிசனத்துக்கு மேலே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், மாணிக்க விநாயகர் சன்னதி துவங்கி, தாயுமான ஸ்வாமி படிக்கட்டுகள் வரை கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது. காலை, 10.30 மணிக்கு மேல் மழை கொட்ட ஆரம்பித்து, மதியம், 3 மணி வரை நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !