காஞ்சிரங்குடி மகான் பக்கீர் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்
ADDED :3593 days ago
கீழக்கரை: காஞ்சிரங்குடி மகான் பக்கீர் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. இந்த விழா டிச., 5ல் துவங்கியது. நேற்று அதிகாலை 4 மணிக்கு ஜும்மா பள்ளிவாசலில் இருந்து மின்னொளி தேரில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கடற்கரை அருகே பக்கீர் அப்பா தர்காவில் மக்பராவிற்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. கீழக்கரை அரூசியா அரபிக்கல்லூரி உலமா சபைத்தலைவர் சலாகுதீன் உலக நன்மைக்கான துஆ ஓதினார். சந்தனக்கூடு தலைவர் நஜிமுன் அலி, செயலர் அன்வர், பொருளாளர் சம்சுதீன், ஊராட்சி மன்றத்தலைவர் காளிமுத்து ஆதித்தன் பங்கேற்றனர்.