உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிஜெகநாத பெருமாள் உண்டியல் வசூல் ரூ.5.66 லட்சம்

ஆதிஜெகநாத பெருமாள் உண்டியல் வசூல் ரூ.5.66 லட்சம்

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ரோஜாலி சுமதா தலைமை வகித்தார். ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி எஸ்.எஸ்.ஏ.எம். அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யர்கள் உண்டியல் காணிக்கைகளை எண்ணினர். ரூ.4.55 லட்சம் கிடைத்தது. அதேபோல் சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உண்டியலில் ரூ.1.11 லட்சம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !