உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

விருதுநகர்: விருதுநகர் சொக்கநாதர் சுவாமி கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.கார்த்திகை மாதம் திங்கள் கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சொக்கநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சன்னதி முன்பு 1008 சங்குகளால் ஓம் வரையப்பட்டு அதனுள் சிவலிங்கம் இருப்பது போன்று அழகாக அடுக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் கார்த்திகை சோமவார விழா நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமி, விசாலாட்சியம்மனுக்கு 18 வகை அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடந்தது. மாலையில் 108 சங்குடன் பூரண கும்பம் வைத்து பூஜைகள் நடந்தது. பூஜிக்கப்பட்ட சங்கு நீரால் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. புஷ்ப அலங்கார வழிபாடு, தேவார பாரயணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !