சென்னை வெள்ளம் கூட்டு பிரார்த்தனை
ADDED :3589 days ago
நாகர்கோவில்: சென்னையில் வெள்ளத்தால் இறந்தவர்கள் ஆன்மா சாந்திக்காகவும், வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியும் கோட்டார் குமரி மெட்ரிக் பள்ளியில் மாணவ மாணவிகளின் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் சொக்கலிங்கம், முதல்வர் சாம் அருள்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோல சிவசேனா சார்பில் கன்னியாகுமரி கடற்கரையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. 27 நம்பூதிரிகள் இதனை நடத்தினர். காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை நடைபெற்றது. மாவட்ட தலைவர் எ.பி. ராஜன் தலைமை வகித்தார்.