உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளிமலை முருகன் கோயிலுக்கு 11ம் தேதி காவடி ஊர்வலம்

வேளிமலை முருகன் கோயிலுக்கு 11ம் தேதி காவடி ஊர்வலம்

நாகர்கோவில்: தக்கலை அருகே பிரசித்தி பெற்ற வேளிமலை முருகன் கோயில் உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு எல்லா கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையன்று காவடி பவனி செல்கிறது. மன்னர் உத்தரவு படி, மக்களின் செழிப்பான வாழக்கைக்காக பொதுப்பணித்துறையினரும், பாதுகாப்பான வாழ்க்கைக்காக போலீஸ் துறையினரும் காவடி எடுத்து செல்கின்றனர். அது தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் 11-ம் தேதி காலையில் தக்கலை போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து காவடி பவனி அலங்கரிக்கப்பட்ட யானையுடன் புறப்பட்டு செல்கிறது. இதுபோல பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான காவடிகள் கோயிலுக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !