சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சோமவார சிறப்பு பூஜைகள்
ADDED :3590 days ago
சின்னசேலம்: சின்னசேலம் அருகே சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதத்தை யொட்டி சோமவார பூஜைகள் நடந்தது. சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி கிராமத்தில் அமைந்துள்ள சொர்ணம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார உற்சவம் நடந்தது. காலை 6:00 மணிக்கு, மூலவருக்கு 108 வலம்புரி சங்குகள் அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் இளங்கோவன் மற்றும் கார்த்திகேயன், ஸ்ரீதர் குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் சின்னசேலம் கங்கதீஸ்வரருக்கும், உலகியநல்லுர் அர்த்தநாரீஸ்வரர், கூகையூர் அசலகுசலம்பிகை பஞ்சாட்ச நாதருக்கும் சிறப்பு பூஜை நடந்தது.