விக்கிரவாண்டியில் சோமவார சிறப்பு பூஜை
ADDED :3590 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி சமேத புவனேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜை நடந்தது. கார்த்திகை மாத மூன்றாவது ÷ சாமவாரத்தை முன்னிட்டு, புவனேஸ்வரர், புவனேஸ்வரிக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் புவ÷ னஸ்வரர், புவனேஸ்வரி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீப ஆராதனை நடந்தது. பூஜைகளை ரவி குருக்கள், வேதாத்திரி குருக்கள் செய் திருந்தனர். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சுப்புராயலு, உபயதாரர் குமாரசாமி செய்திருந்தனர்.