உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரணத்தை தடுக்க சேவ் சபரிமலை திட்டம்

மரணத்தை தடுக்க சேவ் சபரிமலை திட்டம்

சபரிமலை: சபரிமலையில் ஏற்படும் மரணத்தை தடுக்க சேவ் சபரிமலை என்ற சபரிமலை பாதுகாப்பு திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.கடந்த மண்டல- மகரவிளக்கு சீசனில் மலையே-றும் போது 42 பக்தர்கள் மரணம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாரடைப்பால் மரணம் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படு கிறது. பத்தணந்திட்டை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, தேவசம் போர்டு, போலீஸ் துறை, ஐயப்பா சேவா சங்கம் இணைந்து டெலிமெடிசின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பம்பை -சன்னிதானம் பாரம்பரிய பாதையில் 14, சுவாமி ஐயப்பன் ரோட்டில் ஏழு, சன்னிதானத்தில் மூன்று அவசர சிகிட்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு உயிர் காக்கும் மருந்துகள், கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மையத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டால், அருகில் உள்ள டாக்டர்கள் இந்த மையத்திற்கு வந்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் சன்னிதானம், பம்பை இதில் எது அருகில் உள்ளதோ அங்குள்ள மருத்துவமனைக்கு ஸ்டிரெச்சர் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !