காயநிர்மலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
ADDED :3799 days ago
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை, காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் பிரதோஷத்தையொட்டி, காயநிர்மலேஸ்வரர் மற்றும் நந்தி பகவான் ஸ்வாமிக்கு, பால், தேன், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு அபி?ஷக பூஜைகள் நடந்தன. பின், மூலவர் காயநிர்மலேஸ்வரர் மற்றும் நந்தி பகவான் ஸ்வாமிகள், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், வீரகனூர், நாவக்குறிச்சி உள்ளிட்ட சிவன் கோவில்களில், பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தன.