கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவில் நந்தவனம் ரூ.1.50 லட்சத்தில் புனரமைப்பு
                              ADDED :3612 days ago 
                            
                          
                          சேலம்: கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவிலின் நந்தவனம், 1.50 லட்சம் ரூபாயில் புனரமைக்கப்படுகிறது. சேலம், கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவிலின் கருவறையின் பின்பகுதியில், சுந்தர்ராஜ பக்தசபா சார்பில், நந்தவனம் பராமரிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நந்தவனத்தை புதுப்பிக்க முடிவு செய்து, அதற்கான பணிகள் துவங்கின. இதுகுறித்து, சுந்தர்ராஜ பக்தசபா நிர்வாகி முரளி கூறியதாவது: நந்தவனத்தை புதுப்பிக்க, ஓவியங்கள் வரையப்படுகின்றன. அல்லி, தாமரை குளங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. அங்குள்ள புற்கள் அகற்றப்பட்டு, புதிய புல்தரை, செயற்கை நீரூற்று அமைக்கப்படுகிறது. மேலும், லண்டனில் இருந்து நவீன எல்.சி.டி., பல்புகள், தோரணங்கள் வரவழைக்கப்பட்டு, நந்தவனம், இரவிலும் பகல்போல் ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.