உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவர்சம்பக சஷ்டி துவக்கம்

திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவர்சம்பக சஷ்டி துவக்கம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சம்பக சஷ்டி விழா நேற்று துவங்கியது.யோக வைரவர் சன்னதி முன்பாக, யாகசாலையில் காலை 9 மணிக்கு அஷ்டபைரவர் யாகம் துவங்கியது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில், கணேச குருக்கள், ரமேஷ் குருக்கள் தலைமையில் 8 சிவாச்சாரியார்கள் யாகத்தைநடத்தினர். மூலவருக்கு பூர்ணாகுதி நடந்தது.மூலவர் பைரவருக்கு சந்தனக்காப்பில் வெள்ளி அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையிலும் யாகம் நடந்தது. தொடர்ந்து டிச.16 ம் தேதி வரை யாகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !