உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் அய்யப்பன் கோவிலில் 38ம் மகர விளக்கு பூஜை!

திருப்போரூர் அய்யப்பன் கோவிலில் 38ம் மகர விளக்கு பூஜை!

திருப்போரூர்: திருப்போரூர் அய்யப்பன் கோவிலில், 38ம் ஆண்டு மகர விளக்கு பூஜை நடைபெற்றது.  திருப்போரூர் அய்யப்பன் கோவிலில், நடப்பாண்டிற்கான மகர விளக்கு பூஜை, நேற்று முன்தினம், காலை, 9:00 மணயளவில், கணபதி பூஜையுடன் துவங்கப்பட்டது.  விழாவில், அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. மாலையில், சிறப்பு அலங்காரத்தில், அய்யப்ப சுவாமி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பெண்களும்; பக்தர்களும் திருவிளக்கு எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !