உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் நாக முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம் நாக முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நாக முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் சாமிநாதன் தெருவில் உள்ள நாக  முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  இதனையொட்டி நேற்று  முன்தினம் கணபதி ேஹாமம், நவகிரக ேஹாமம், யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. நேற்று காலை யாகசாலை பூஜைகள், கடம் புறப் பாடு நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது. பூஜைகளை சீனுவாச சிவாச்சாரியார்  செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !