வனதுர்க்கையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
ADDED :3587 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வனதுர்க்கையம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகர் வன துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த அக். 25ம் தேதி நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் நிறைவு விழாவையொட்டி நேற்று காலை கணபதி ஹோமத்துடன் 108 சங்குகளுக்கு யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், புனிதநீர் வனதுர்க்கையம்மனுக்கு ஊற்றி சிறப்பு அபிஷேகமும் நடந்தது. யாகசாலை மற்றும் அபிஷேக பூஜைகளை முண்டியம்பாக்கம் கண்ணன் குருக்கள் செய்தார். பூஜை ஏற்பாடுகளை கைலாஷ் , தர்மகர்த்தா ராஜாராமன், திருப்பணிக்குழு செயலாளர் ராஜபாண்டியன், பொருளாளர் பாபு, பூ சாரிகள் காசிலிங்கம், ராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.