வனதிருப்பதி கோயிலில் வரும் 5ம் தேதி சிறப்பு வழிபாடு
உடன்குடி : வனத்திருப்பதி கோயிலில் வரும் 5ம் தேதி சிறப்பு வழிபாடு, திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா, சிறப்பு அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. வனத்திருப்பதி புன்னை ஸ்ரீநிவாச பெருமாள் ஆதிநாராயணர் சிவனைந்த பெருமாள் கோயிலில் ஓட்டல் சரவணபவன் நிறுவனர் ராஜகோபாலின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 5ம் தேதி சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. புன்னை ஸ்ரீநிவாச பெருமாளுக்கு காலை 8 மணிமுதல் புஷ்பாஞ்சலி லட்சார்ச்சனை சிறப்பு வழிபாடு, அஷ்டோத்திர சங்காபிஷேகம், காலை 9 மணிக்கும், மாலை 6 மணிக்கும் முருகன் குழுவினரின் சிறப்பு நாதஸ்வரமும், மாலை 5 மணிக்கு முதல் முறையாக வனத்திருப்தியானுக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 5 மணிக்கு உடுமலை செந்தில் நாட்டியாஞ்சலியும், கோலாட்டமும், வாணவேடிக்கையும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத ஸ்ரீநிவாசபெருமாள், ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத புன்னை ஸ்ரீராஜகோபாலசுவாமி, வள்ளி , தெய்வானை சமேத திருத்தணி சுப்பிரமணியசுவாமி ஆகிய மூர்த்திகள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிநடக்கிறது. மேலும் 65 மாணவ,மாணவியர்களுக்க ஆங்கிலம் தமிழ் அகராதி வழங்கும் நிகழ்ச்சியும்,65 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும் பல்வேறு வகையான சிறப்பு அன்னதானம் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை வள்ளியம்மாள்,ராஜகோபால், ஷிவகுமார், சரவணன், ஓட்டல் சரவணபவன் முதன்மை நிர்வாகி கணபதி, சிற்பி கணேசன், கோயில் அதிகாரி வசந்தன்,மற்றும் ஓட்டல் பணியாளர்கள் ஆகியோர் செய்துவருகின்றனர்.