சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் ஆடிப்பூர கொடை விழா
தென்தாமரைகுளம் : சோட்டப்பணிக்கன்தேரிவிளை தேவி முத்தாரம்மன் கோயில் ஆடிப்பூர கொடை விழா இன்று (2ம் தேதி) நடக்கிறது. இன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து கடல் பதம் கொண்டு வருதல், வில்லிசை, பகலில் தேவி முத்தாரம்மனுக்கு பூஜை, சமபந்தி விருந்து, மாலையில் மாரி அம்மனுக்கு பூஜை, வில்லிசை, இரவு உஜ்ஜினி மாகாளி அம்மனுக்கு பூஜை, நள்ளிரவு மளற்றும் அதிகாலையில் காவல் தெய்வங்களுக்கு பூஜை ஆகியன நடக்கிறது. நாளை (3ம் தேதி) பிரசாதம் வழங்கல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆடிப்பூர கொடை விழா பொறுப்பாளர்கள் கணேசன், கிருஷ்ணன் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
சக்தி கொடி ஊர்வலம் : சோட்டப்பணிக்கன் தேரவிளையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள துர்க்கை, லெட்சுமி, சரஸ்வதி கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இன்று (2ம் தேதி) சக்தி கொடி ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தை தென்தாமரைக்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் துவக்கி வைக்கிறார் முருகேசன், தங்கசுவாமி, ஸ்ரீரங்கன், சுபகாரவேல், ஜோதிராமலிங்கம், நாராயணசிவா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர், திரைப்பட இயக்குனர் ரவி வர்மன் கலந்துகொள்கிறார். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி ரவி செய்து வருகிறார்.