கோபி கோவிலில் ஆடிப் பூரம் விழா
கோபிசெட்டிபாளையம்:ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோபி விசாலாட்சி அம்மனுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் வளையல் அணிவித்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். கோபி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர ஸ்வாமி கோவிலில், ஆடிப்பூர திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று காலை 6.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. உற்சவர் விசாலாட்சி அம்பாளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்பாளுக்கு வளையல் சாத்தி, நூற்றுக்கணக்கான பெண்கள் தரிசனம் செய்தனர். கோவில் முன் தற்காலிக வளையல் கடைகள் அதிகளவில் காணப்பட்டன.கோவிலில் வரும் 5ம் தேதி மூன்றாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. காலை 9 மணி, பகல் 12.30 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 7.45 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. வரும் 6ம் தேதி சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் குருபூஜையை முன்னிட்டு, மாலை 4 மணிக்கு ஸ்நபன மகன்யாச அபிஷேகம், மாலை 6.30 மணிக்கு தீபாரானை நடக்கிறது.