கருணாம்பிகை அம்மனுக்கு தங்க கவசம்
ADDED :5201 days ago
அவிநாசி : அவிநாசி கோவில் கருணாம்பிகை அம்மனுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க கவசத்தை ஒரு பக்தர் காணிக்கையாக வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமாக, அவிநாசி பெருங்கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கருணாம்பிகை அம்மனுக்கு திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். ரூ.10 லட்சத்துக்கு அதிகமுள்ள தங்க கவசம் ஆறு பாகங்களை கொண்டுள்ளது. நேற்று ஆடிப்பூர தினம் என்பதால், இரவு 7.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடத்தப்பட்டது. கோவில் செயல் அலுவலர் வெற்றிச்செல்வன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல், வட்டார காங்., தலைவர் அவிநாசியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.