இயற்கை பேரிடரில் இருந்து மக்களை காக்க கன்னிவாடியில் 108 சங்காபிஷேகம்!
கன்னிவாடி: இயற்கை பேரிடரில் இருந்து மக்களை காக்க வலியுறுத்தி, கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
கன்னிவாடி-பழநி ரோட்டில், சோமலிங்கபுரம் அருகே மலைக்குன்றில் சோமலிங்கசுவாமி கோயில் உள்ளது. வழக்கமாக, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி போன்ற நாட்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் இருக்கும். தற்போது பிற நாட்களிலும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. மலைக்குன்றில் உள்ள மெய்கண்ட சித்தர் குகையில், வேதி தீர்த்தம் நிரப்பப்பட்ட 108 சங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தேவார, திருவாசக பாராயணம் செய்யப்பட்டு, இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காக்ககோரி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஓங்கார விநாயகர், வனதுர்க்கைக்கு விசேஷ அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர், சிறப்பு சங்காபிஷேகம் நடந்தது. சோமலிங்க சுவாமிக்கு நாகாபரணம் சாற்றுதலுடன், விசேஷ பூஜைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.