உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் சோமவாரபூஜையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. திரு வெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சோமவாரபூஜையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலை  4:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், கலசபூஜையும் நடந்தது. தொடர்ந்து சிவாக்னிஹோமம் மற்றும் 108 சங்குகளை வைத்து சிறப்பு  பூஜைகள் செய்யப்பட்டன. மாலை 5:30 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.  ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஸ்ரீகன்யா, குருக்கள் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !