உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமிக்குள் இருந்து மேலே வந்தவர்!

பூமிக்குள் இருந்து மேலே வந்தவர்!

ஸ்ரீரங்கத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்தார் ராமானுஜர். இங்கேயே அவர் மோட்சமும் அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்து அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னிதியில் காட்சி தருகிறார். இவரை பார்த்தால் மயிர்க்கூச்செறியும் அளவுக்கு திருமேனி அமைப்பு இருக்கும். இவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்ந்த கலவை மட்டும் சாத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !