உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கிறீர்களா?

அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கிறீர்களா?

நோய்வாய்பட்டு, அறுவைச் சிகிச்சை அவசியம் தேவை என்ற நிலையில் இருக்கிறீர்களா? வைகுண்ட ஏகாதசியன்று, குலசேகராழ்வார் பாடிய இந்தப் பாடலை பக்தியுடன் படித்து விட்டு, மருத்துவமனைக்குச் செல்லுங்கள். பெருமாள் அருளால் சிகிச்சை சுபமாய் முடியும். வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மாநீ ஆளாஉனது அருளே பார்ப்பன் அடியேனே. பொருள்: வித்துவக்கோடு என்னும் திவ்யதேசத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! வாளைக் கொண்டு வலிக்க வலிக்க உடல் உறுப்புகளை அறுத்து வைத்தியம் செய்யும் மருத்துவரை, ஒரு நோயாளி தெய்வமாகவே பார்க்கிறார். அதுபோல், நீ மாயச்செயல் செய்து, எனக்கு தீராத துன்பத்தையே தந்தாலும், உன்னருளை வேண்டியே நிற்பேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !