உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டுவேலை செய்து கொண்டே ஸ்லோகம் சொன்னால் பலனுண்டா?

வீட்டுவேலை செய்து கொண்டே ஸ்லோகம் சொன்னால் பலனுண்டா?

பெரும்பாலும் குடும்பப்பெண்கள் இப்படித்தான் ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் மனதிற்குள் பாராயணம் செய்துகொண்டே வீட்டு வேலைகளைச் செய்வார்கள். இடையில் சுவாமிக்கு பூ சாத்துதல், நிவேதனம் செய்தல், தீபம்காட்டுதல் போன்றவற்றையும் செய்து முடிப்பார்கள். வேலை செய்யும்போது, உண்ணும்போது. என எப்போதும் ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் பாராயணம் செய்து கொண்டே இருக்கலாம். இது விஷயத்தை துஞ்சலும் துஞ்சல்இலாத போதும் எனத்துவங்கும் தேவாரத்திலும் இடரினும் தளரினும் எனத் துவங்கும் தேவாரத்திலும் திருஞானசம்பந்தர் அருமையாகப் பதிவு செய்திருப்பதைக் காணலாம். எனவே, வேலை நேரத்தில் தாராளமாக ஸ்லோகம் சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !