உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீயவற்றை விட்டு தடுப்போம்!

தீயவற்றை விட்டு தடுப்போம்!

தீய செயல்களை நாம் மட்டுமல்ல! பிறரையும் செய்யவிடாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என்கிறார் நபிகள் நாயகம்.அவர் மக்கள் மத்தியில்பேசியதில், ஒரு பகுதியைக் கேளுங்கள். சிலர் தம் அண்டைவீட்டாரிடம் இறைநெறிபற்றிய அறிவைத் தோற்றுவிப்பதில்லை. மேலும், இறை நெறியை அவர்களுக்கு கற்று தருவதும் இல்லை. இறைநெறி குறித்து அறியாமல் இருந்தால், ஏற்படக்கூடிய படிப்பினையூட்டும் விளைவுகள் குறித்தும் அவர்களுக்கு உணர்த்துவதில்லை. மேலும், அவர்களைத் தீய செயல்களை விட்டுத் தடுப்பதும் இல்லை.மேலும், ஏன் இவ்வாறு இருக்கிறது? சிலர் தம் அண்டை வீட்டாரிடமிருந்து இறைநெறி பற்றிய அறிவைப் பெறுவதும் இல்லை. இறைநெறியின்பால் உணர்வுகளை பெருக்கிக் கொள்வதும் இல்லை. இறைவன் மீது ஆணையாக! மக்கள் தம் அண்டை வீட்டாருக்கு அவசியம் இறைநெறியைக் கற்றுத்தரவேண்டும்.

இறைநெறியின் ஆழ்ந்த கருத்துக்களை அவர்களிடம் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யவேண்டும்.நல்ல விஷயங்களை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தீயவற்றில் இருந்து அவர்களைத் தடுக்கவேண்டும். ஆக, மக்கள் அவசியம் தம் அண்டை வீட்டாரிடமிருந்து இறைநெறியைக் கற்றுக் கொள்ளவேண்டும். இறைநெறி பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய உபதேசங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல், விரைவில் அவர்களுக்கு நான் தண்டனைஅளிப்பேன், என்றார்.இறைநெறி பற்றியஅறிவு இல்லாததால் தான், இன்று உலகத்தில்அநியாயங்கள் பெருத்துவிட்டன. இறைவனைப் பற்றிய பயம் எள்ளளவும்மக்களிடம் இல்லை. இதற்கு, இறைவனைப் பற்றிவிஷயமறிந்தவர்கள் ஒதுங்கிக் கொள்வது தான் காரணம். எனவே, தீய செயல்களைத் தடுக்க ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதும், வளரச் செய்வதும் அனைவரின் கடமையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !