ஸ்ரீரங்கத்தில் முக்கிய திருவிழாக்கள் நான்கு!
ADDED :3983 days ago
ஸ்ரீரங்கத்தில் சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் பிரம்மோற்சவம் நடக்கிறது. சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, ஆதி பிரம்மோற்சவம் என்பர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் (பங்குனி உத்திரம்) சுவாமி, ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமியையே ஆண்ட ராமர் நடத்திய விழா என்பதால் இந்த விழா, பூபதி திருநாள் எனப்படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம். இருப்பினும், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி திருநாள் தான் இங்கு மிகவும் பிரசித்தம். அன்று, அதிகாலையே பெருமாள் சொர்க்கவாசல் கடப்பார். அவர் பின்னால், ஏராளமான பக்தர்கள் அணிவகுத்து வருவார்கள்.