உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இவ்ளோ பெரிய வேட்டியா?

இவ்ளோ பெரிய வேட்டியா?

ரங்கநாதர் சன்னிதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், பெருமாள் எப்போது அழைத்தாலும், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். கஜேந்திரன் என்னும் யானை, கூகு என்னும் முதலையிடம் சிக்கித் தவித்து ஆதிமூலமே என கதறி அழைத்த போது, பெருமாள் கருடனைப் பார்க்க, கணநேரத்தில் அவரை அங்கே கொண்டு சேர்த்தார். கஜேந்திரனுக்கு மோட்சமே தந்தார் பெருமாள். பக்தர்கள் எப்போது அழைத்தாலும், அவர்களுக்காக பெருமாளைக் கொண்டு போய் சேர்க்கும் இந்த கருடாழ்வாருக்கு, 30 மீட்டர் நீள வேட்டி அணிவிக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இவரைத் தரிசிக்க வியாழக்கிழமை விசேஷ நாள். அன்று கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது அது மட்டுமல்ல! இவரது சன்னிதி முன் சுக்ரீவனும், வாலியின் மகன் அங்கதனும் துவார பாலகர்களாக உள்ளனர். மார்கழி மாத திருவாதிரையன்று (டிச.26) இந்த கருடாழ்வாருக்கு திருநட்சத்திர விழா நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !