உணவுக்கும் பஞ்சமில்லை சுக்கிரனால் தொல்லையுமில்லை!
ADDED :3983 days ago
ஸ்ரீரங்கம் கோவில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு (அன்ன லட்சுமி) சன்னிதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் மாலை அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது சன்னிதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். தானிய லட்சுமியையும், அன்னப்பெருமாளையும் தரிசித்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உணவு பஞ்சம் வராது.