நோயா...இனி வரவே வராது!
ADDED :3983 days ago
ஸ்ரீரங்கம் கோவிலில் மருத்துவக் கடவுளான தன்வந்திரிக்கு சன்னிதி இருக்கிறது. இவரது மார்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். கைகளில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சி இருக்கிறது. தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். அத்துடன் தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக்கலவையையும் படைக்கப்படும். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.