ஸ்ரீரங்கம் - டிட்பிட்ஸ்
ADDED :3983 days ago
*ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை.
*கோவிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.
*வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்கள் ரங்கநாதருக்கு, முத்தங்கி சாத்தப்பட்டு காட்சி தருகிறார்.
*திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி அதை தன் நெற்றியில் தாங்கி, ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.
*டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.
*திறக்கும் நேரம்: காலை 6.15- பகல்1 மணி, பகல் 2- இரவு 9 மணி.
*தொலைபேசி: 0431 243 2246.