வீரகாளிஅம்மன் கோயிலில் கீழவளவில் பூத்தட்டு திருவிழா
ADDED :3642 days ago
மேலுார்,:மேலுார் அருகே கீழவளவு வீரகாளிஅம்மன் கோயிலில், கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு பூத்தட்டு திருவிழா நேற்று நடந்தது.கீழவளவு, வடக்குவலையபட்டி, வாச்சாம்பட்டி, அடைஞ்சான்கண்மாய்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமத்தினர் கலந்து கொண்டனர். அம்மன் வீதி உலா மற்றும் பக்தர்களின் பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.