நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம்!
ADDED :3953 days ago
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தில் சிறப்பு அலங்கரத்தில் பெருமாள் வீதியுலா நடந்தது. காரைக்கால் நித்யகல்யாண ரங்கநாதப்பெருமாள் கோவிலில் கடந்த 11ம் தேதி பகல்பத்து உற்சவம் துவங்கியது. தினசரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. 5ம் நாளில் நித்யகல்யாணப் பெருமாள் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின், பெருமாள் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர் செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி செய்திருந்தனர்.