மதுரை மொட்டை கோபுர முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக கோலாகலம்!
ADDED :3587 days ago
மதுரை: வடக்கு சித்திரை வீதி, மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுர வாசல், மகா முனீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள ஆத்மார்த்த மூர்த்திகமல மகா முனீஸ்வரர்க்கு 14.12.2015 திங்கட்கிழமை காலை 5.45 மணிக்குமேல் 6.37 மணிக்குள் ப்ராண ப்ரதிஷ்டா வைபவம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சி 13.12.2015 காலை 7.00-10.30 மணிக்குள்- கணபதி ப்ரார்த்தனை, எஜமான அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனையுடன் ஆரம்பமானது. பின்னர் 14.12.2015 காலை 4.00 மணிக்கு- 2-ம் கால யாகபூஜை, ஸ்பர்ஸாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனைக்கு பின் காலை 5.45 மணிக்கு- கடம் புறப்பாடானது. காலை 6.15 மணிக்கு- ப்ராண ப்ரதிஷ்டை கும்ப அபிஷேகம் தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் தீபாராதனைக்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது.