உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேகத்துக்கு தயாராகிறது எல்லை மாகாளியம்மன் கோவில்

கும்பாபிஷேகத்துக்கு தயாராகிறது எல்லை மாகாளியம்மன் கோவில்

கோவை : எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில், கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த, எல்லை மாகாளியம்மன் கோவில் இருந்தது. அம்மன் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். கோவையின் காவல்தெய்வமாகவும், வாகனஓட்டிகளின், இஷ்டதெய்வமாகவும் விளங்கி வருகிறார். நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது கோவில் அகற்றப்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலையிலிருந்து, 1,000 அடி துாரத்தில், 23, சென்ட் இடம் கோவிலுக்காக வாங்கி, கருங்கற்களை கொண்டு, கோவில் கட்டுமானப் பணி துவங்கியது. பணிகள் நிறைவடைந்து. நாளை (டிச., 18ம் தேதி) திருக்குடநன்னீராட்டுப்பெருவிழா நடக்கிறது. பேரூராதீனம் சாந்தலிங்கராமசாமி அடிகள், கவுமாரமடாலயம், குமரகுருபரஅடிகள், தென்சேரிமலை திருநாவுக்கரசர் நந்தவன திருமடம் முத்துசிவராம அடிகள், மணிவாசகர் அருட்பணிமன்ற தலைவர் சென்னியப்பனார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !