சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் 21ம் தேதி சொர்க்க வாசல்
ADDED :3587 days ago
ஊத்துக்கோட்டை: சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், வரும் 21ம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை, பிராமணத் தெருவில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், சொர்க்க வாசல் திறப்பு விழா, பிரசித்தி பெற்றது. இந்தாண்டு, வரும் 21ம் தேதி, இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதிகாலை, 4:00 மணிக்கு நடைபெற உள்ள, இந்த நிகழ்ச்சியில் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.