தீவனூர் கோவிலில் திருவோண தீபம்
ADDED :3587 days ago
திண்டிவனம்: திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, தீவனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், திருவோண தீபம் ஏற்றப்பட்டது. தீவனூரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று, தீபம் ஏற்றப்பட்டது. இதை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு, கோவில் எதிர்புறம் உள்ள கற்கம்பத்தில், திருவோண தீபம் ஏற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகத்தா முனுசாமி மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.