உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

அன்னுார்: அன்னுார் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும், 21ம் தேதி நடக்கிறது. பழமையான அன்னுார் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியான 21ம் தேதி, அதிகாலை 3:30 மணிக்கு அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜை நடக்கிறது. காலை 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. பின்னர், ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக பெருமாள் திருவீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடக்கிறது. அன்னுார், நல்லிசெட்டிபாளையம், அச்சம்பாளையம் பஜனை குழுக்களின் பஜனை, பிருந்தாவனம், இரவு 8:00 மணிக்கு துவங்கி, அடுத்த நாள் காலை 6:00 மணி வரை நடக்கிறது. பின்னர் அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கரிவரத ராஜப்பெருமாள் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !