மதுரை கூடலழகர் கோயில் மார்கழி பெருவிழா
ADDED :3586 days ago
மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் மார்கழி பெருவிழா இன்று துவங்குகிறது. இதைமுன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. பகல் பத்து உற்சவ நாட்களில் பெருமாள் காலை 9 மணிக்கு புறப்பாடாகி சேவை தொடர்ச்சி நடக்கிறது. ராப்பத்து உற்சவம் டிச.,21ல் துவங்கி 31 வரை நடக்கிறது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, டிச.,21ல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம் வைகுண்டநாதர் திருக்கோலம் நடக்கிறது. மதியம் 2.30 மணிக்கு அலங்கார திருமஞ்சனம், இரவு 7.15 மணிக்கு பரமபதவாசல் திறப்பு, இரவு 7.30 மணிக்கு நம்மாழ்வார் மங்களாசனம், இரவு 8 மணிக்கு திருவாராதனம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் செல்லத்துரை, உதவி கமிஷனர் அனிதா செய்து வருகின்றனர்.