சோழவந்தான் தென்கரை ஐயப்பனுக்கு ஆராட்டு விழா
ADDED :3586 days ago
தென்கரை: சோழவந்தான் தென்கரை சாஸ்தா ஐயப்பன் கோயில் கார்த்திகை உற்சவத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா வைகை ஆற்றில் நடந்தது.கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு, சுவாமி வேல்அம்புடன் வைகை ஆற்றில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் ரவிசுப்பிரமணியம், பரசுராமகண்ணன் தலைமையில் 18 வகை திரவியங்களால் அபிஷேக, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அன்னதானம் வழங்கினர். பின்னர் சுவாமி ராஜஅலங்காரத்தில் ரதவீதியில் எழுந்தருளினார். ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் செய்திருந்தது.