உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இலவச மருத்துவ முகாம்

ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இலவச மருத்துவ முகாம்

பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிவாசிகளுக்கு, இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பள்ளிக்கரணை, வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில், ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலை சுற்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிவாசிகளுக்கு, நேற்று காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.அதில், பொது மருத்துவப் பரிசோதனை, கண் மற்றும் பல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. ஜல்லடியன்பேட்டை, நாராயணபுரம், பள்ளிக்கரணையை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள், முகாமில் கலந்து கொண்டனர்.

* வில்லிவாக்கம்: கனமழையால், வில்லிவாக்கம், சிட்கோ நகர், வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர் பகுதிவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனால், வில்லிவாக்கம் தனியார் திருமண மண்டபத்தில், தனியார் மருத்துவமனை சார்பில், நேற்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர். மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !