பனிமயமாதா ஆலயத்தில் இன்று சப்பர பவனி
ADDED :5289 days ago
தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவில், சப்பர பவனி இன்றிரவு நடக்கிறது. வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக, சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின், 429வது ஆண்டு திருவிழா, ஜூலை 26ல் துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தன. நேற்றிரவு, பனிமய அன்னையின் சப்பர பவனி, ஆலய வளாகத்தில் மட்டும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பனிமய அன்னை சப்பரத்தில் வீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி, இன்றிரவு, 7.30 மணிக்கு நடக்கிறது. இதில், ஏராளமானோர் கலந்துகொள்வர்.